search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் போட்டிக்கான தரவரிசை: ஆஸ்திரேலியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து
    X

    ஒருநாள் போட்டிக்கான தரவரிசை: ஆஸ்திரேலியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு அந்த இடத்தை பறிகொடுக்கும் நிலையில் உள்ளது.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியதால் நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா தலா 118 புள்ளிகள் பெற்றுள்ளது. மிகத்துள்ளியமான புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதல் இடம்பிடித்துள்ளது.

    தற்போது தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நேற்றைய 3-வது ஆட்டத்தை வென்றதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 3-0 எனத் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    அந்த அணி கடைசி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை 5-0 என ஒயிட்வாஷ் செய்யும் முயற்சியில் இருக்கிறது. அப்படி செய்துவிட்டால் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும். ஆஸ்திரேலியா 2-வது இடத்திற்கு பின்தங்கிவிடும்.
    Next Story
    ×