search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டம்: வங்காள தேசம் 224 ரன்கள் எடுத்து டிக்ளேர்- இந்திய ஏ அணி பதிலடி
    X

    பயிற்சி ஆட்டம்: வங்காள தேசம் 224 ரன்கள் எடுத்து டிக்ளேர்- இந்திய ஏ அணி பதிலடி

    இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா ஏ பதிலடி கொடுத்துள்ளது.
    இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கிடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கு முன்னதாக வங்காள தேசம் - இந்திய ஏ அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இக்பால் 13 ரன்னிலும், இம்ருல் கெய்ஸ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த சவுமியா சர்க்கார் 52 ரன்களும், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 58 ரன்கள் சேர்க்கவும், வங்காள தேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய ஏ அணி பேட்டிங்கை தொடங்கியது, தொடக்க வீரர்களாக பன்சால், அபிநவ் முகுந்த் ஆகியோ் களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு பன்சால் உடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. பன்சால் 40 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். நாளை 2-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
    Next Story
    ×