search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    ஹேமில்டன்:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேப்பியரில் நடைபெற இருந்த 2-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹேமில்டனில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் களம் இறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது.

    டெய்லர் 107 ரன்னும், தொடக்க வீரர் புரவுன்லி 63 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க், பில்க்னெர் தலா 3 விக்கெட்டும், ஹாசல்வுட் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 257 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து 24 ரன்னில் வெற்றி பெற்றது.

    ஆரோன் பிஞ்ச் 56 ரன்னும், டிரெவிஸ்ஹெட் 43 ரன்னும் எடுத்தனர். போல்ட் 33 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். சான்ட்னெர் 2 விக்கெட்டும், வில்லியம்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டெய்லர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 178-வது ஒரு நாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 16-வது செஞ்சூரி ஆகும். இதன் மூலம் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரரான ஆஸ்லேயை சமன் செய்தார்.
    Next Story
    ×