search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியல் மாட்ரிட்டின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்த செவில்லா வாலென்சியா
    X

    ரியல் மாட்ரிட்டின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்த செவில்லா வாலென்சியா

    40 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு கம்பீரமாக சென்ற ரியல் மாட்ரிட் அணிக்கு செவில்லா வாலென்சியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் 40 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று சாதனைப் பெற்றிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணி, செவில்லா வாலென்சியா அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல்பாதி நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 67-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் 85-வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் சேம்சைடு கோல் போட ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. 90 நிமிடங்கள் முடிந்து கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது 91-வது நமிடத்தில் செவில்லா அணியின் ஸ்டீவன் ஜோவெடிக் சிறப்பாக கோல் அடிக்க, செவில்லா 2-1 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட்டின் 40 தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    லா லிகா தொடரில் 17 போட்டிகளில் 40 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், செவில்லா 18 போட்டிகளில் 39 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 18 போட்டிகளில் 38 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
    Next Story
    ×