search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை: டிவில்லியர்ஸ்
    X

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை: டிவில்லியர்ஸ்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகியிருப்பதாகவும் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் என்று சொல்லப்படும் ஏபி டிவில்லியர்ஸ் காயம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. எனவே, அவர் விரைவில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் மார்ச் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளில் டிவில்லியர்ஸ் விளையாடுகிறார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

    டெஸ்ட் போட்டிக்கு திரும்புவது பற்றி அவர் கூறுகையில், “டெஸ்ட் போட்டிகளுக்கு எப்போது திரும்புவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. என் மனதில் சில விஷயங்கள் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்னும் உலகக்கோப்பையை நாங்கள் வெல்லவில்லை என்பதும் அதில் ஒன்று. எனவே 2019 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்.

    ஒவ்வொரு வடிவத்திலும் நான் சீரிய முறையில் ஆட முடியாது. அதனால்தான் நியூசிலாந்துக்கு எதிராக விலகினேன். ஒருநாள் போட்டிகளுக்கு அங்கு ஆடச் செல்வேன். ஆனால் நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை.

    ஒரு கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு 2019 உலகக்கோப்பைதான் முக்கியமாகத் தெரிகிறது. கோப்பையை வெல்வதை நாங்கள் உறுதி செய்யவேண்டும்” என்றார்.
    Next Story
    ×