search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: குஜராத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது
    X

    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: குஜராத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மோதிரா பகுதியில் இருந்த சர்தார் பட்டேல் ஸ்டேடியம் 54 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. மிக பழமையான இந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் அந்த ஸ்டேடியம் இடிக்கப்பட்டது.

    இந்நிலையில், புதிய ஸ்டேடியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் குஜராத் கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் பரிமள் நத்வானி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த ஸ்டேடியத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு ஸ்டேடியம் தயாராகிவிடும் என குஜராத் கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் பரிமள் நத்வானி அறிவித்தார்.

    90 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உள்ள மெல்போர்ன் ஸ்டேடியத்தைவிட (ஆஸ்திரேலியா) மோதிராவில் அமைய உள்ள ஸ்டேடியம் மிகப்பெரியது. இதில், 1.10 லட்சம் இருக்கைகள் அமைக்கப்படும். மெல்போர்ன் ஸ்டேடியத்தை வடிவமைத்த நிறுவனம்தான் இந்த ஸ்டேடியத்தையும் வடிவமைக்கிறது என்றும் பரிமள் நத்வானி கூறினார்.
    Next Story
    ×