search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 539 ரன் குவிப்பு
    X

    வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 539 ரன் குவிப்பு

    வங்காளதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 539 ரன் குவித்து பதிலடி கொடுத்தது.
    நியூசிலாந்து - வங்காள சேதம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஷகிப்-அல்-ஹாசன் இரட்டை சதமும் (217 ரன்), முஷ்பீகுர் ரகீம் சதமும் (159 ரன்) அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் டாம் லாதம் சதம் அடித்தனர். அவர் 119 ரன்னும், நிக்கோலஸ் 35 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 539 ரன் குவித்து பதிலடி கொடுத்தது. டாம் லாதம் 177 ரன்கள் குவித்தார். 56 ரன்கள் முன்னிலையில் வங்காளசேதம் 2-வது இன்னிங்சை ஆடியது.
    Next Story
    ×