search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும்: விராட் கோலி
    X

    டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும்: விராட் கோலி

    ஒருநாள் மற்றும் டி20 போட்டியின்போது டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்த டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த டோனி கடந்த 4-ந்தேதி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி கேப்டனாக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே டி.ஆர்.எஸ். முறையை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறிவந்தார். அதில் அவர் உறுதியாக இருந்ததால் பி.சி.சி.ஐ. டி.ஆர்.எஸ். முறையை கொண்டு வந்தது. அதன்படி முதன்முதலாக சோதனை முறையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்பட்டது. அதில் இந்தியாவிற்கு அதிக அளவில் பயன்கிடைத்தது.

    மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக பதவி ஏற்றுள்ள விராட் கோலி இன்று முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது டோனி சாதாரண வீரராக செயல்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு விராட்  கோலி பதில் அளிக்கையில் ‘‘எதிரணி பேட்ஸ்மேனுக்கு எதிராக டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்த நான் முதலில் டி.ஆர்.எஸ். ரிவியூ கேட்பதற்கு தயாராவேன். ஆனால் டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும். அவருடைய வார்த்தைகள்தான் என்னை டி.ஆர்.எஸ். ரிவியூ கேட்க வைக்க முக்கிய காரணமாக இருக்கும்.

    கிரிக்கெட் போட்டியில் டோனி ஒரு நுண்ணறிவுமிக்க வீரர். நான் பார்த்ததில் அவருடைய விக்கெட்டுக்காக அப்பீல் 95 சதவீதம் சரியாகத்தான் இருக்கும். டிஆர்எஸ் குறித்து கவலை ஏற்படும்போது அவரது ஒரு வார்த்தை மட்டும்தான் எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். கிரிக்கெட் மைதானத்தில் எங்களுடைய வெளிப்பாடு குறித்து நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். அவருடைய கருத்துக்கள் விலைமதிப்பற்றதாக இருக்கும்’’ என்றார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேவில் நாளை பகல் - இரவு ஆட்டமாக தொடங்குகிறது.
    Next Story
    ×