search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: பாக். 92 ரன் வித்தியாசத்தில் தோல்வி
    X

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: பாக். 92 ரன் வித்தியாசத்தில் தோல்வி

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்யியடைந்தது.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என கைப்பற்றியது. அதன்பின் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று பிரிஸ்பேனில் நடந்தது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா தொடக்க விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது. வார்னர் 7 ரன்னிலும், ஸ்மித் டக்அவுட்டிலும், லைன் 16 ரன்னிலும், மார்ஷ் 4 ரன்னிலும், ஹெட் 39 ரன்னிலும் ஆட்டம் இழக்க அந்த அணி 78 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    ஆனால், 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், வடே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேக்ஸ்வெல் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வடே 100 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 3 விக்கெட்டும், மொகமது ஆமிர் மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அசார் அலி மற்றும் ஷர்ஜீல் கான் ஆகியோர் களம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 24 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷர்ஜீல் கான் 18 ரன்கள் எடுத்த நிலையிலும் பால்க்னெர் பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் அணி 54.4 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பால்க்னெர் 4 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி மெல்போர்னில் 15-ந்தேதி நடைபெறுகிறது.
    Next Story
    ×