search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ‌ஷகிப் இரட்டை சதத்தால் வங்காளதேசம் ரன் குவிப்பு
    X

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ‌ஷகிப் இரட்டை சதத்தால் வங்காளதேசம் ரன் குவிப்பு

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ‌ஷகிப்-அல்-ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரகிமின் அபார ஆட்டத்தால் வங்காள தேசம் அணி ரன்கள் குவித்தது.
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.

    வங்காளதேசம் 3 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. மொமினுல் ஹகி 64 ரன்னிலும், ‌ஷகிப்-அல்-ஹசன் 5 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. மொமினுல் ஹசி 64 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து ‌ஷகிப் அல்-ஹசன்- முஷ்பிகுர் ரகிம் ஜோடி சிறப்பாக விளையாடியது. நியூசிலாந்து பந்து வீச்சை நொறுக்கி ரன் குவித்தது. ஷகில்-அல்-ஹசன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு முதல் இரட்டை சதமாகும்.

    முஷ்பிகுர் ரகிம் 159 ரன்னில் அவுட் ஆனார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 359 ரன் சேர்த்தனர். வங்காளதேசம் 128 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 521 ரன் குவித்து இருந்தது.

    டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வங்காளதேச வீரர் என்ற சாதனையை ‌ஷகிப்-அல்-ஹசன் படைத்தார்.
    Next Story
    ×