search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-இங்கிலாந்து மோதல்: முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது
    X

    இந்தியா-இங்கிலாந்து மோதல்: முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (15-ந்தேதி) புனேவில் நடக்கிறது.
    புனே:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டி தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (15-ந்தேதி) புனேவில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக களம் காணுகிறது. இந்திய அணி பேட்டிங்கில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கோலி, டோனி, யுவராஜ்சிங் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    மிடில் ஆர்டர் வரிசையில் ரகானே, மணிஷ் பாண்டே கேதர் யாதவ் ஆகியோர் உள்ளனர். இதனால் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். டெஸ்டில் அசத்திய சுழற் பந்து கூட்டணியான அஸ்வின், ஜடேஜா இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.

    தொடக்க வீரர்களாக தவான், லோகேஷ் ராகுல் களம் இறங்குவார்கள். இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் டோனி, யுவராஜ்சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அவர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஹால்ஸ், ஜோரூட், சாம்பில்லிங் கிஸ், மொய்ன் அலி, ஜோஸ் பட்லர் போன்ற சிறந்த பேஸ்ட் மேன்கள் உள்ளனர். பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், டேவிட் வில்லி, புளுங்கெட், டவ்சன், ஜேக் பால் ஆதில்ரஷித் போன்றோர் உள்ளனர்.

    டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா:- கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ரகானே, டோனி, யுவராஜ்சிங் கேதர் யாதவ், மனீஷ் பாண்டே, அஸ்வின், ஜடேஜா, உமேஷ், யாதவ், புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்ட்யா, அமித் மிஸ்ரா, ஜஸ்பிரீத் பும்ரா.

    இங்கிலாந்து:- இயன் மோர்கன் (கேப்டன்) ஜேசன் ராய், ஹால்ஸ், ஜோரூட், சாம் பில்லிங்கிஸ் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோவ், மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ் கிறிஸ்வோக்ஸ் டவ்சன், ஜேக் பால், ஆதில் ரஷீத், புளுங்கெட், டேவிட் வில்லி.

    Next Story
    ×