என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்லாதான் 100-வது டெஸ்டில் விளையாடும் கடைசி வீரராக இருப்பார்: டு பிளிசிஸ் சொல்கிறார்
    X

    அம்லாதான் 100-வது டெஸ்டில் விளையாடும் கடைசி வீரராக இருப்பார்: டு பிளிசிஸ் சொல்கிறார்

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் 100-வது டெஸ்டில் விளையாடும் கடைசி வீரராக அம்லா இருப்பார் என்று அந்த அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. இந்த போட்டி அம்லாவிற்கு 100-வது போட்டியாகும்.

    அம்லா 100-வது போட்டியில் விளையாடுவது குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் 100 டெஸ்டில் விளையாடி பெருமை சேர்த்த கடைசி வீரராக அம்லாதான் இருப்பார். ஏனென்றால், தற்போ கிரிக்கெட் மாறி கொண்டு வருகிறது. டி காக் மற்றும் ரபாடா ஆகியோர் 100 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் வருங்காளத்தில் நீண்ட தீரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் சராசரி வயது 27.85 ஆகும். இதில் ஆடும் லெவனில் இடம்பெறாத 24 வயதுடைய இரு வீரர்களும் அடங்குவார்கள். நான், அம்லா, ஸ்டீபன் குக், டுமினி மற்றும் வெர்னோன் பிளாண்டர் ஆகியோரின் வயது சராசரி 30 ஆகிவிட்டது.

    தற்போதைய நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு பரிணாமங்கள் நடைபெற்றுள்ளன. ஹசிம் அம்லா, டி வில்லியர்ஸ் மற்றும் கால்லிஸ் ஆகியோர் விளையாடிய காலத்தில் ஏராளமான டெஸ்ட் போடிகள் நடத்தப்பட்டன. தற்போது டி20 ஆட்டங்கள் அதிகரித்து விட்டன. ஆகவே, இந்த ஆட்டத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் மற்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருப்பதால், நீண்ட நாட்களாக விளையாடுவது கடினம்’’ என்றார்.
    Next Story
    ×