search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு
    X

    இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    புதுடெல்லி :

    வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டி ஐதராபாத்தில் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குவதாக இருந்தது.

    இந்த நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் இந்த போட்டியை நடத்த மறுத்துள்ளது. தங்களுக்கு போதிய நிதி வழங்கப்படாததால் இந்த போட்டியை நடத்த இயலாது என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    இதே போல் இந்தியா - இங்கிலாந்து ஜூனியர் கிரிக்கெட் அணிகள் (19 வயதுக்குட்பட்டோர்) இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடுத்த மாதம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டு இருந்தது. இந்த போட்டி பிப்ரவரி 13-ந்தேதி தொடங்குவதாக இருந்தது.

    இந்த ஜூனியர் டெஸ்ட் போட்டியை தங்களால் நடத்த இயலாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் கைவிரித்துள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச்செயலாளர் பழனி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘திட்டமிடப்பட்ட பல்வேறு உள்ளூர் நிகழ்ச்சிகள் அந்த காலக்கட்டத்தில் நடக்க இருப்பதால் இவ்விரு போட்டிகளையும் சென்னையில் நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    லோதா கமிட்டியின் பரிந்துரையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளதால் 70 வயதுக்கு மேற்பட்டோரும், தொடர்ந்து 9 ஆண்டுகள் பதவியில் இருந்தவர்களும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னணி நிர்வாகிகள், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பலரும் பதவியை இழந்துள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் போட்டியை நடத்த மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×