search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாக். மண்ணில் கிரிக்கெட்: பாதுகாப்பு அனுமதி, வீரர்கள் ஒப்பந்தம் குறித்து யோசிக்கும் வெ.இண்டீஸ்
    X

    பாக். மண்ணில் கிரிக்கெட்: பாதுகாப்பு அனுமதி, வீரர்கள் ஒப்பந்தம் குறித்து யோசிக்கும் வெ.இண்டீஸ்

    பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு பாதுகாப்பு அனுமதி மற்றும் வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
    2009-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன்பிற்கு எந்தவொரு கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனால் எப்படியாவது முன்னணி அணிக்கெதிரான தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியே தீர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. புளோரிடா மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது சொந்த மைதானமாக கருதி விளையாடி வருகிறது.

    இதனால் பாகிஸ்தான் அணி இரண்டு டி20 போட்டிகளில் தங்களுடன் புளோரிடா மைதானத்தில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டது. இதற்கு பதிலளித்த பாகிஸ்தான், ‘எங்கள் நாட்டிற்கு வந்து இரண்டு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்தால், நாங்கள் விளையாட தயார்’ என்று கடிதம் அனுப்பியது.

    இந்த கடிதம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட்டுக்கான நடவடிக்கை மானேஜர் ரோலண்ட் ஹோல்டர் கூறுகையில் ‘‘நாங்கள் பாகிஸ்தான் மண்ணில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் ஒப்பந்தம், பாதுகாப்பு அனுமதி முக்கிய அம்சமாக இருக்கிறது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு திட்டம் குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றோம். அதை எங்களுடைய பாதுகாப்பு மானேஜர், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கான சங்கம் மற்றும் தனிப்பட்ட சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க இருக்கின்றனர்.

    வீரர்கள் மற்றும் கிரிக்கெட் அணியின் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு மிகமிக முக்கியம் என்பதால், அதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் கிடைக்கும் வகையில் நாங்கள் முயற்சி செய்து கொண்டு வருகிறோம். போட்டிகள் நடக்கும் இடத்தை நாங்கள் ஆய்வு செய்து, அறிக்கை எங்களுக்கு கிடைத்தவுடன் இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. பொதுக்கூட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி லாகூரில் மார்ச் மாதம் 18, 19-ல் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தலாம். அதன்பிறகு புளோரி்டாவில் இரண்டு டி20 போட்டிகளை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×