search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் தொடர் ரத்து: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு
    X

    கிரிக்கெட் தொடர் ரத்து: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு

    கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

    கராச்சி:

    இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 6 போட்டி தொடர் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால் கிரிக்கெட் போட்டி தொடருக்கு இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டி தொடரை நடந்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு கிரிக்கெட் வாரியம் எந்த பதிலும் கூறவில்லை.

    இதனால் கிரிக்கெட் போட்டி தொடர் ரத்து ஆனது. இதன்மூலம் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.

    போட்டி தொடர் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் கிரிக்கெட் வாரியம் பதில் கூறவில்லை.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர பாகிஸ்தான் முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி சகாரியர்கான் கூறியதாவது:-

    கிரிக்கெட் போட்டி தொடர் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. ஆனால் விளையாட மறுத்து வருகிறது. இதனால் நஷ்டஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றார்.

    Next Story
    ×