என் மலர்
செய்திகள்

ஒருநாள் தொடரில் ஸ்மித்துதான் என் இலக்கு: இர்பான் சொல்கிறார்
ஆஸ்திரேலியாவின் ஆடுகளத்தை பயன்படுத்தி நல்ல பாஃர்மில் இருக்கும் ஸ்மித்தை வீழ்த்துவதே என் இலக்கு என பாகிஸ்தான் வீரர் இர்பான் சொல்கிறார்.
பாகிஸ்தானின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் மொகமது இர்பான் 7 அடியும் ஒரு இஞ்ச் உயரம் கொண்டவர். இவர் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 13-ந்தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மொகமது இர்பான் கூறுகையில் ‘‘நான்தான் மிகவும் அதிக உயரம் கொண்ட பந்து வீச்சாளர். பவுன்சருக்கு சாதகமான ஆஸ்திரேலியாவின் ஆடுகளத்தை நான் சாதகமாக பயன்படுத்திக் கொள்வேன். அதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்தை வீழ்த்துவேன். ஸ்மித்துதான் என்னுடைய இலக்கு’’ என்றார்.

Next Story