search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிளப் லீக்: பெங்கால் பேட்ஸ்மேன் அவுட்டாகாமல் 413 ரன் அடித்து சாதனை
    X

    கிளப் லீக்: பெங்கால் பேட்ஸ்மேன் அவுட்டாகாமல் 413 ரன் அடித்து சாதனை

    கிளப் லீக் போட்டியில் மேற்கு வங்காள பேட்ஸ்மேன் பங்கஜ் ஷா அவுட்டாகாமல் 413 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
    மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல் டிவிஷன் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பரிஷா ஸ்போர்ட்டின் அணி சார்பில் 28 வயதான பங்கஜ் ஷா 44 பவுண்டரிகள், 23 சிக்சர்கள் மூலம் அவுட்டாகாமல் 413 ரன்கள் குவித்துள்ளார்.

    6-வது விக்கெட்டுக்கு அஜ்மிர் சிங் (47) உடன் இணைந்து 203 ரன்களும், 7-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயன் சக்ரபோர்ட்டி (22) உடன் இணைந்து 191 ரன்களும் குவித்தார். இவரது அபார ஆட்டத்தால் பரிஷா ஸ்போர்ட்டிங் அணி 115 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 708 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பரிஷ் ஸ்போர்ட்டிங் அணியை எதிர்த்து விளையாடிய தக்சின் கலிகட்டா சன்சாத் அணி 369 ரன்னில் சுருண்டது.
    Next Story
    ×