search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்சியாவின் ஆஸ்காரை 60 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கும் சீன கிளப்
    X

    செல்சியாவின் ஆஸ்காரை 60 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கும் சீன கிளப்

    பிரேசில் நாட்டின் முன்னணி நடுக்கள வீரரான ஆஸ்காரை செல்சியாவிடம் இருந்து 60 மில்லியன் பவுண்டு கொடுத்து சீனாவின் முன்னணி கால்பந்து கிளப் வாங்குகிறது.
    இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து கிளப் அணி செல்சியா. இந்த அணிக்காக 25 வயதான பிரேசில் அணியின் முன்னணி நடுக்கள ஆட்டக்காரர் ஆஸ்கார் விளையாடிவருகிறார். இவரை சீனாவின் முன்னணி கிளப் அணியான ஷாங்காய் எஸ்.ஐ.பி.ஜி. அணி வாங்க விருப்பம் தெரிவித்தது.

    இதற்கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஷாங்காய் 60 மில்லியன் பவுண்டு கொடுத்து ஆஸ்காரை ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆஸ்கார் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் ‘‘ஷாங்காய் எஸ்.ஐ.பி.ஜி. அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட இருப்பது சந்தோஷம். புதிய குடும்பமான சீனாவுடன் இணைய இருப்பது எனக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கப்போகிறது’’ என்றார்.

    ஏற்கனவே, சீன சூப்பர் லீக் கிளப்புகள் 400 மில்லியன் டாலர்கள் அளவில் வெளிநாட்டு முன்னணி வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×