search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிஸ்பேன் டெஸ்ட்: கடைசி நாளில் பாக்.வெற்றிக்கு 108 ரன்கள்; கைவசம் 2 விக்கெட்
    X

    பிரிஸ்பேன் டெஸ்ட்: கடைசி நாளில் பாக்.வெற்றிக்கு 108 ரன்கள்; கைவசம் 2 விக்கெட்

    பிரிஸ்பேன் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 108 ரன்கள்தான் தேவை. ஆனால், கைவசம் 2 விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளது.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பகல்- இரவு பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 429 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 142 ரன்னில் சுருண்டது.

    287 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 5 வி்க்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நி்ர்ணயிக்கப்பட்டது. கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

    அசார் அலி 41 ரன்னுடனும், யூனிஸ்கான் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று தொடர்ந்து விளையாடிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    அசார் அலி 71 ரன்களும், யூனிஸ்கான் 65 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். ஆனால் அடுத்த வந்த மிஸ்பா உல் ஹக் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

    6-வது வீரராக களம் இறங்கிய ஆசாத் ஷபிக் சிறப்பாக விளையாடினார். அவருக்கு பந்து வீச்சாளர் மொகமது ஆமிர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஆமிர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆசாத் ஷபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவரது சதத்தால் பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் சேர்த்துள்ளது.

    ஆசாத் ஷபிக் 100 ரன்னுடனும், யாசீர் ஷா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் வெற்றிக்கு இன்னும் 108 ரன்கள் தேவை. ஆனால், ஒருநாள் முழுவதும் இருக்கையில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே வைத்துள்ளது. இதனால் என்ன ஆகும்? என்பதை நாளை பார்ப்போம்.
    Next Story
    ×