என் மலர்
செய்திகள்

பயிற்சி இல்லாததால் ஓட்டலில் முடங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாலியாக வீடியோ கேம் விளையாடுகிறார்கள்.
சென்னை டெஸ்ட் போட்டிக்கான ஏற்பாடுகள் தயார்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பயிற்சி
சென்னை டெஸ்ட் போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
சென்னை :
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் இடையே ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. விசாகப்பட்டினம், மொகாலி, மும்பையில் நடந்த அடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை சென்னையை தாக்கி நிலை குலையை வைத்த வார்தா புயல் சேப்பாக்கம் ஸ்டேடியத்தையும் விட்டுவைக்கவில்லை. ஸ்டேடியத்தில் இருக்கைகள், சைடு ஸ்கிரீன், உயர்கோபுரத்தில் உள்ள மின்விளக்குகள், குளிர்சாதன வசதிகள் ஆகியவை சேதம் அடைந்தன. ஸ்டேடியத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பல மரங்கள் அடியோடு சரிந்தன.
இதையடுத்து புயலால் ஸ்டேடியத்தில் பாதிப்புக்கு உள்ளான அனைத்தையும் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இருக்கைகள், சைடு ஸ்கீரின் ஆகியவை முழுமையாக சரி செய்யப்பட்டு விட்டன. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. இன்று காலைக்குள் அனைத்து பணிகளையும் செய்து முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. ‘போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. குறித்த நேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியும்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் உறுதி அளித்துள்ளார்.
பிட்ச் மற்றும் ஸ்டேடியத்தை சீரமைக்கும் பணிகள் நடந்ததால் இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்களுக்கு நேற்று பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் வீரர்கள் ஓட்டலிலேயே நேரத்தை கழிக்க நேர்ந்தது. ‘நெட்வொர்க்’ பிரச்சினை காரணமாக வீரர்களால் இணையதள சேவையை அதிகம் பயன்படுத்த முடியவில்லை. வீடியோ கேம்ஸ் விளையாடியும், அங்குள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும் நேரத்தை செலவிட்டனர்.
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிமை) காலை 9.30 மணிக்கு இந்திய அணியினரும், பகல் 12.30 மணிக்கு இங்கிலாந்து அணியினரும் பயிற்சி மேற்கொள்கிறார்கள். பயிற்சி ஆடுகளம் முழுமையாக தயார் நிலையில் இல்லாததால் இரு அணியினரும் பீல்டிங் பயிற்சியில் மட்டும் ஈடுபட உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி, இங்கிலாந்து அணி கேப்டன் அலஸ்டயர் குக் ஆகியோர் பேட்டி அளிக்கிறார்கள்.

Next Story