search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடரில் 2-வது போட்டி: பகல்-இரவு டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது
    X

    ஆஷஸ் தொடரில் 2-வது போட்டி: பகல்-இரவு டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது

    அடுத்த ஆண்டுக்கான (2017) ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நவம்பர் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையும் நடக்கிறது.
    சிட்னி :

    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானதாகும். பாரம்பரியமிக்க இந்த போட்டி தொடரில் இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக மல்லுக்கட்டும். கடந்த ஆண்டு (2015) இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டி தொடரில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்து தொடரை கைப்பற்றியது.

    அடுத்த ஆண்டுக்கான (2017) ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் தொடங்கி 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நடக்கிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டி தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நவம்பர் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையும் நடக்கிறது.

    2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது. இதில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும். ஏற்கனவே அடிலெய்டில் இரண்டு பகல்-இரவு ஆட்டங்கள் நடந்து இருக்கின்றன. 3-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் டிசம்பர் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையும், 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் 2018-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
    Next Story
    ×