என் மலர்
செய்திகள்

உலகின் எந்த இடத்திலும் கோலியால் ரன் குவிக்க முடியும்: கபில்தேவ் பதிலடி
உலகின் எந்த இடத்திலும் கோலியால் ரன் குவிக்க முடியும் என ஆண்டர்சனின் விமர்சனத்துக்கு கபில்தேவ் பதிலடி கொடுத்துள்ளார்
புதுடெல்லி:
இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, இந்திய மண்ணில் தான் அதிக ரன்கள் குவிக்கிறார் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதாவது வெளிநாட்டு மண்ணில் அவர் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை என்ற அர்த்தத்தில் கூறியிருந்தார். ஆண்டர்சனின் விமர்சனத்துக்கு இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கபில்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘விராட் கோலியால் எல்லா இடத்திலும் சிறப்பாக விளையாடி ரன் குவிக்க முடியும். தற்போது அவரது ஆட்டம் நம்ப முடியாத அளவுக்கு அமைந்துள்ளது. இந்தியர் ஒருவர் இவ்வாறு ஆடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை போன்ற ஒரு வீரரை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. இந்த தருணத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர் தான் என்பதை அவரது சாதனைகளே (மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சராசரி 50 ரன்களுக்கு மேல்) பறைசாற்றும்’ என்றார்.
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 5 டெஸ்ட் தொடரை கைப்பற்றினாலும், அவரது கேப்டன்ஷிப் செயல்பாடு குறித்து இப்போதே கணிப்பது சரியாக இருக்காது. அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்றும் கபில்தேவ் குறிப்பிட்டார்.

Next Story