search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் தரவரிசை: ரூட்டை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார் கோலி
    X

    டெஸ்ட் தரவரிசை: ரூட்டை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார் கோலி

    டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி. ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் விராட் கோலி 235 ரன்கள் குவித்தார். இதனால் முதன்முறையான டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 2-வது இடத்தில் இருந்தார். மும்பை டெஸ்டில் 235 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலி 886 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 897 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஸ்மித்தை விட 11 புள்ளிகள்தான் விராட் கோலி பின்தங்கியுள்ளார். சென்னையில் 16-ந்தேதி தொடங்கும் ஐந்தாவது போட்டியில் சதம் அடித்தால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 854 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 817 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    ஹசிம் அம்லா, டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர், புஜாரா, யூனிஸ்கான், பேர்ஸ்டோவ் ஆகியோர் முறையே ஐந்தாவது இடத்தில் இருந்து 10-வது இடம் வரை பிடித்துள்ளனர்.

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி 2-வது இடத்திலும், டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ளார்.

    டெஸ்ட் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
    Next Story
    ×