search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்னும் நன்றாக பேட்டிங் செய்யும் வகையில்தான் ஆடுகளம் உள்ளது: பட்லர்
    X

    இன்னும் நன்றாக பேட்டிங் செய்யும் வகையில்தான் ஆடுகளம் உள்ளது: பட்லர்

    மும்பை வான்கடே மைதானம் இரண்டு நாட்களுக்குப்பின் இன்னும் நன்றாக பேட்டிங் செய்யும் வகையில்தான் ஆடுகளம் உள்ளது என்று பட்லர் கூறியுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் 2-வது நாளுக்குப்பின் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 350 ரன்களுக்குள் இங்கிலாந்து சுருண்டு விடும் என்று நினைக்கையில் பட்லரின் அபார பேட்டிங்கால் இங்கிலாந்து அணி 400 ரன்னில் சுருண்டது.

    பட்லர் 137 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார். 2-வது நாள் ஆட்டம் முடிந்த நிலையிலும் ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக உள்ளது என்று பட்லர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘தற்போது வரை பேட்டிங் செய்ய நல்ல வகையில்தான் உள்ளது. ஒன்றிரண்டு அளவுக்கு அதிகமான டர்ன் ஆனதைத் தவிர மற்றபடி பந்தில் ஒன்றுமில்லை. பந்து திடீரென டர்ன் ஆகும் என்ற சிந்தனையை மனதில் இருந்து விரட்டி விட்டு விளையாடினால் நன்றாக பேட்டிங் செய்யலாம்’’ என்றார்.

    விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் இந்தியாவிற்காக சிறந்த முறையில் பேட்டிங் செய்தார்கள். ஆனால், இன்னும் நாங்கள் 250 ரன்கள் முன்னிலைப் பெற்றிருக்கிறோம். பந்து அதிக அளவு டர்னிங் ஆகும்போது ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பதை முந்தைய கால உலக கிரிக்கெட்டில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும்பொழுது விக்கெட் விழ வாய்ப்புள்ளது.

    தொடர்ச்சியாக நன்றாக பந்து வீசி அதிக அளவில் ரன்கொடுக்கமால் பந்து வீசுவது முக்கியமானதாகும்’’ என்றார்.
    Next Story
    ×