search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது டெஸ்ட்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? இங்கிலாந்துடன் நாளை மோதல்
    X

    4-வது டெஸ்ட்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? இங்கிலாந்துடன் நாளை மோதல்

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    அலஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

    ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங்கில் கோலி, பார்த்தீப் பட்டேல், புஜாரா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். முதல் டெஸ்டில் சதம் அடித்த முரளி விஜய் அடுத்த 2 டெஸ்டில் ரன் குவிக்கவில்லை.

    இது போல் ரகானேவின் ஆட்டமும் சிறப்பாக இல்லை. இதனால் இருவரும் திறமையை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளனர்.

    பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதுகெலும்பாக உள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜா, ஜெய்ந்த் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

    இதனால் 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். கேப்டன் குக், ஜோரூட் ஆகியோர் மட்டுமே தாக்கு பிடிக்கிறார்கள்.

    பந்து வீச்சிலும் பெரிய தாக்கத்தை அந்த அணி ஏற்படுத்தவில்லை. இதிலிருந்து மீண்டு வர இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சி செய்து வருகிறார்கள். 4-வது டெஸ்டிலும் தோற்றால் தொடரை இழக்கும் நிலை ஏற்படும். இதனால் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×