search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் சுமித்தின் சாதனை
    X

    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் சுமித்தின் சாதனை

    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் சுமித் செய்த சாதனைகளை பற்றி கீழே பார்க்கலாம்.
    சிட்னி :

    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவன் சுமித் 164 ரன்கள் குவித்தார்.

    * இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் 27 வயதான ஸ்டீவன் சுமித் 164 ரன்கள் விளாசினார். இது அவரது தனிநபர் அதிகபட்சமாகும். மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய கேப்டன் என்ற சாதனையை ரிக்கிபாண்டிங்குடன் (2006-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 164 ரன்) சமன் செய்தார்.

    * 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 162 ரன்கள் எடுத்ததே இந்த சிட்னி மைதானத்தில் ஒரு வீரரின் அதிகபட்சமாக இருந்தது. அதையும் ஸ்டீவன் சுமித் தாண்டினார்.

    * நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 5,069 ரன்கள் சேர்த்துள்ளார். 5 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது நியூசிலாந்து வீரர் (ஏற்கனவே ஸ்டீபன் பிளமிங், நாதன் ஆஸ்டில், பிரன்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர்) என்ற சிறப்பை நேற்று பெற்றார். தனது 132-வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய கப்தில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த நியூசிலாந்து வீரர் ஆவார்.

    * 2 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவின் விக்கெட் எண்ணிக்கை இந்த ஆண்டில் 30 ஆக (19 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 2016-ம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். ஜான் ஹேஸ்டிங்ஸ் (ஆஸ்திரேலியா), அடில் ரஷித் (இங்கிலாந்து) தலா 29 விக்கெட்டுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.
    Next Story
    ×