search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடிபட்ட நபருக்காக மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதிமுறை: நியூசிலாந்தில் அறிமுகம்
    X

    அடிபட்ட நபருக்காக மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதிமுறை: நியூசிலாந்தில் அறிமுகம்

    போட்டியின்போது காயமடையும் வீரருக்குப் பதிலாக பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பர் போன்ற பணிகளை செய்யும் வகையில் புதிய வீரரை களமிறக்கும் விதியை நியூசிலாந்து அறிமுகம் செய்கிறது.
    இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டி முக்கிய விளையாட்டாக கருதப்பட்டு வருகிறது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆர்வத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் ஐ.சி.சி. புதுப்புது முறையை அறிமுகப்படுத்தி வருகிறது.

    தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு விளையாட முடியாத நிலைமைக்குச் சென்றால் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும். ஆனால், பந்து வீசவோ அல்லது பேட்டிங் செய்யவோ இயலாது.

    இந்த விதிமுறையை உள்ளூர் தொடர்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மாற்றி அமைத்தது. ஒரு வீரர் தலையில் அடிபட்டு விளையாட முடியாத அளவிற்கு பாதிப்புக்குள்ளானால் அவருக்குப் பதிலாக களம் இறங்கும் வீரர் பீல்டிங் செய்வதுடன் பேட்டிங் மற்றும் பந்து வீசவும் செய்யலாம்.

    கடந்த மாதம் ஆஸ்திரேலியா இந்த விதிமுறையை உள்ளூர் தொடரில் நடைமுறைப்படுத்தியது. நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக டேனியல் ஹியூக்ஸ் பேட்டிங் செய்யும்போது தலையில் ஏற்பட்ட காயத்தில் வெளியேறினார். அவருக்குப் பதிலாக புதிய பேட்ஸ்மேன் பேட்டிங் செய்தார்.

    இதே நடைமுறையை நியூசிலாந்து அணி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்பின் தேசிய ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

    இந்த விதிமுறைப்படி மருத்துவ ஆலோசகர், வீரரின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து எடுக்கும் முடிவின்படி மாற்று வீரர் களம் இறக்கப்படுவார்.
    Next Story
    ×