search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2012 அணி வேறு, தற்போதைய அணி வேறு: குக் சொல்கிறார்
    X

    2012 அணி வேறு, தற்போதைய அணி வேறு: குக் சொல்கிறார்

    2012-ம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து அணி வேறு, தற்போது இந்தியாவில் விளையாடும் அணி வேறு என்று அந்த அணியின் கேப்டன் குக் கூறியுள்ளார்.
    மொகாலியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடரில் 0-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. எஞ்சிய இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால்தான் தொடரை சமன்செய்ய முடியும். இல்லையெனில் தொடரை இழக்க நேரிடும்.

    2012-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த இங்கிலாந்து அணி தொடரை 2-1 எனக்கைப்பற்றியது. இந்தியா அணியில் சச்சின், சேவாக், காம்பீர், ஹர்பஜன் சிங் மற்றும் டோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்த போதிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    தற்போது அந்த அணி தோல்வியடைந்தது குறித்து குக் கூறுகையில், 2012 அணியில் அனுபவம் வாய்ந்த பழைய வீரர்கள் இருந்தார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘2012-ல் இந்தியா வந்து விளையாடி எங்கள் அணி முற்றிலும் மாறுபட்டது. அப்போதைய அதிக வயதுடைய அணியுடன் தற்போது ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. அது முற்றிலும் மாறுபட்ட அமைப்பை கொண்ட அணி.

    அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும், நான்கு வருடத்திற்கு மேல் இதுபோன்ற சூழ்நிலையில் விளையாடிய வீரர்கள் இருந்தனர். எங்களுடைய 2012-ம் ஆண்டு அணியில் ஏராளமான அனுபவ வீரர்கள் (குக், இயான் பெல், பீட்டர்சன், மாட் பிரியர், ஆண்டர்சன், ஸ்வான், மோன்டி பெனாசர்) இருந்தார்கள். அவர்கள் இதுபோன்ற சூழ்நிலையிலான ஆடுகளத்தில் ஏராளமான போட்டியில் விளையாடி இருந்தார்கள்.

    தற்போதைய அணியில் உள்ள முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒன்றிரண்டு போட்டிகளில்தான் இதற்கு முன் விளையாடி உள்ளனர். ஆகவே, இந்த அணி பொதுவாகவே முற்றிலும் மாறுபட்டது’’ என்றார்.
    Next Story
    ×