search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவுட் ஆன விரக்தியில் இந்திய வீரர்களை திட்டிய பென் ஸ்டோக்ஸ்: ஐ.சி.சி. கண்டிப்பு
    X

    அவுட் ஆன விரக்தியில் இந்திய வீரர்களை திட்டிய பென் ஸ்டோக்ஸ்: ஐ.சி.சி. கண்டிப்பு

    மொகாலி டெஸ்டில் அவுட்டான விரக்தியில் பென் ஸ்டோக்ஸ் இந்திய வீரர்களை நோக்கி தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார். இதனால் ஐ.சி.சி. அவரை கண்டித்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது. அந்த அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியபோது பென் ஸ்டோக்ஸ் அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், 29 ரன்னில் ஜடேஜா பந்தில் ஸ்டம்பிங் ஆகி அவுட் ஆனார்.

    அப்போது இந்திய வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் கோபம் அடைந்த பென் ஸ்டோக்ஸ் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இந்திய வீரர்களை திட்டிக்கொண்டே சென்றார்.

    இதை மைதான நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ் மற்றும் கிறிஸ் கஃபானெய் கவனித்தார்கள். அவர்கள் இந்த பிரச்சினையை போட்டி நடுவரான ரஞ்சன் மதுகலேயிடம் கொண்டு சென்றனர்.

    விசாரணையில் பென் ஸ்டோக்ஸ் வீரர்களின் நன்னடத்தை விதி 2.1.4.-ஐ மீறியதாக தெரியவந்தது. அவரது குற்றம் 1-வது லெவலுக்குள்ளானது என்பதால் கண்டிப்புடன், சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளி வழங்க ஐ.சி.சி. முடிவு செய்தது. இதற்கு பென் ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை இல்லாமல் கண்டிப்புடன் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார்.

    இன்னும் 24 மாதத்திற்குள் மேலும் நான்கு புள்ளிகள் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டி இதில் எது முதலில் வருகிறதோ அதில் விளையாட தடை விதிக்கப்படும்.
    Next Story
    ×