என் மலர்
செய்திகள்

நெய்மர் 2 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்: ஸ்பெயின் கோர்ட்
பார்சிலோனா அணியின் முன்னணி வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனுமான நெய்மர் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் கோர்ட் அறிவித்துள்ளது.
24 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான நெய்மர் உலகளவில் உள்ள தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நெய்மர் பிரேசிலில் உள்ள சான்டோஸ் கிளப்பிற்காக விளையாடினார். அப்போது பிரேசிலைச் சேர்ந்த DIS என்ற முதலீட்டுக்குழு, நெய்மரின் 40 சதவீத பரிமாற்ற உரிமையை (அணியில் இருந்து வேறு அணிக்கு மாறும் உரிமை) வைத்திருந்தது.
இந்த சமயத்தில் பார்சிலோனா அணி சான்டோஸ் அணியிடம் இருந்து சுமார் 57.1 மில்லியன் யூரோவிற்கு நெய்மரை வாங்கியது. அப்போது நெய்மரின் குடும்பத்திற்கு 40 மில்லியன் யூரோ கொடுக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் நெய்மரின் உண்மையான விலை எவ்வளவு என்பதை இரு கிளப்புகளும் மறைத்துவிட்டன. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று DIS ஸ்பெயினில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நெய்மரின் தந்தை கோர்ட்டில் ஆஜராகி முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று தன் வாதத்தை முன்வைத்தார். இதற்கிடையில் வரிஏய்ப்பில் இருந்து தப்பிக்க பார்சிலோனா நிர்வாகம் 5.5 மில்லியன் யூரோவை அபராதமாக செலுத்த முன்வந்தது.
இதனால் ஸ்பெயின் நீதிபதி ஜோஸ் டி லா மாட்டா இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர முன்வந்தார். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கை தள்ளுபடி செய்ய விடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முறையிட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஸ்பெயின் நீதிபதி ஜோஸ் பெரால்ஸ், பிரேசில் வீரர் நெய்மர் இரண்டு ஆண்கள் ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும், பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவர் சான்ட்ரோ ரொசெல் ஐந்தாண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் பார்சிலோனா கிளப் 8.4 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், ஸ்பெயின் நாட்டின் சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளோ அல்லது அதற்கு குறைவாகவோ தண்டனைப் பெற்றால், அந்த தண்டனையை ரத்து செய்ய முடியும். அதனால் நெய்மர் சிறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
வரி ஏய்ப்பு வழக்கில் 21 மாதங்கள் தண்டனை பெற்ற மெஸ்சி, இந்த சட்டத்தின்படி சிறைக்குச் செல்லாமல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story