search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    204 ரன்களில் ஆட்டமிழந்தது இந்தியா: இங்கிலாந்துக்கு 405 ரன்கள் இலக்கு
    X

    204 ரன்களில் ஆட்டமிழந்தது இந்தியா: இங்கிலாந்துக்கு 405 ரன்கள் இலக்கு

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 405 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.
    விசாகப்பட்டினம்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 455 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பென்ஸ்டோக்ஸ் 70 ரன்னும், ஜோரூட், பேர்ஸ் டோவ் தலா 53 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 67 ரன் கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றினார்.

    200 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து இருந்தது. வீராட் கோலி 56 ரன்னிலும், ரகானே 22 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 298 ரன்கள் முன்னிலை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

    இந்திய அணி 34.2 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது. சிறிது நேரத்தில் இந்த ஜோடி பிரிந்தது. ரகானே மேலும் 4 ரன் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 26 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 117 ரன்னாக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 77 ரன் எடுத்தது.

    அடுத்து அஸ்வின் களம் வந்தார். அவர் 7 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 127 ஆக இருந்தது. அடுத்து சிறிது நேரத்தில் விர்த்திமான் சகாவும் ஆட்டம் இழந்தார். அவர் 2 ரன்களே எடுத்தார். அவரது விக்கெட்டை ஆதில் ரசீத் கைப்பற்றினார்.

    ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் இருந்த கேப்டன் வீராட் கோலி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். சதத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 89 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்னாக இருந்தது.

    பின்னர் இந்திய அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜெயந்த் யாதவ் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இதனால் இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து அணியின் ஹசீப் ஹமீது, அல்ஸ்டார் குக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். 37.1 ஓவரில் இங்கிலாந்து அணி 50 ரன்கள் எடுத்தது.

    50.2 ஓவரில் அஸ்வின் பந்தில் ஹமீது எல்.பி.டபிஸ்யூ முறையில் அவுட் ஆனார். நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த குக் 59.2 ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். அத்துடன் நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இங்கிலாந்து அணி 2 விக்கெட் 87 ரன்கள் எடுத்து இருந்தது. இன்னும் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற 318 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

    Next Story
    ×