என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 133 ரன்னில் சுருண்டது
    X

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் 133 ரன்னில் சுருண்டது

    நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 133 ரன்னில் சுருண்டது.

    கிறிஸ்ட்சர்ச்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்க இருந்தது. ஆனால் பலத்த மழை பெய்ததால் டாஸ் கூட போடாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தனர்.

    நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    அந்த அணி 55.5 ஓவரில் 133 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மிஸ்பர் - உல்-ஹக் 31 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிராண்ட்ஹோமே 6 விக்கெட் வீழ்த்தினார். டிம் சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    அடுத்த முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளனர்.

    Next Story
    ×