search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ரிவியூ’ வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ஜடேஜா டக் அவுட் ஆனார்
    X

    ‘ரிவியூ’ வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ஜடேஜா டக் அவுட் ஆனார்

    விசாகப்பட்டின டெஸ்டில் ‘ரிவியூ’ வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ஜடேஜா டக்அவுட் ஆகி வெளியேறினார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மொயீன் அலியின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியாவின் விக்கெட் மளமளவென சரிந்தது. விராட் கோலி 167 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சகா, மொயீன் அலி வீசிய 105-வது ஓவரின் 2-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். மைதான நடுவர் தர்மசேனா சகாவிற்கு அவுட் கொடுக்க, சகா ‘ரிவியூ’ வாய்ப்பை பயன்படுத்தினார்.

    ஆனால் பந்து ஸ்டம்பை தாக்கியதால் 3-வது நடுவர் அவுட் என அறிவித்தார். அடுத்த 2-வது பந்தில், அதாவது 105-வது ஓவரின் 4-வது பந்தில் ஜடேஜா மொயீன் அலி பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி அவுட் ஆனார். ஆஃப் ஸ்டம்பிற்கு நேராக பிட்ச் ஆகிய பந்து இடது புறமாக திரும்பி ஜடேஜாவின் பேடை தாக்கியது.

    தர்மசேனா அவுட் கொடுத்து விட்டார். எதிர்முனையில் நின்ற அஸ்வினுடன் ஆலோசனை செய்த ஜடேஜா ‘ரிவியூ’ கேட்க விருப்பம் இல்லாமல் சென்றுவிட்டார். பின்னர் ஹாக்-ஐ மூலம் ரீபிளே செய்யப்படும்போது பந்து ஸ்டம்பை தாக்காமல் இடது புறமாக செல்வது தெளிவாக தெரிய வந்தது.

    இதனால் ‘ரிவியூ’ வாய்ப்பை பயன்படுத்தாமல் டக்அவுட் ஆகி வெளியேறினார்.
    Next Story
    ×