search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்: 22 ரன்களுக்குள் 2 விக்கெட் அவுட்
    X

    2-வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்: 22 ரன்களுக்குள் 2 விக்கெட் அவுட்

    விசாகப்பட்டினத்தில் தொடங்கி உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது.
    விசாகப்பட்டினம்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இதையொட்டி இரு அணியினரும் தங்களை தீவிரமாக தயார்படுத்தியுள்ளனர். கோலிக்கு இது 50-வது டெஸ்ட் போட்டி. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது அமித் மிஸ்ராவுக்குப் பதில் ஜெய்ந்த் யாதவ் அறிமுகமாகியிருக்கிறார். கவுதம் காம்பீர் நீக்கப்பட்டு ஆடும் லெவனில் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆனால், துவக்க வீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 5 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் 4 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி 22 ரன்களுக்குள் துவக்க ஜோடியை இழந்தது. அதன்பின்னர் புஜாரா-கோலி இணைந்தனர்.

    இவர்கள் இருவரும் நிலைத்து நின்று சரியான அடித்தளம் அமைக்காவிட்டால் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×