search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்முலா 1 கார் பந்தயம்: பிரேசில் பந்தயத்திலும் ஹேமில்டன் வெற்றி
    X

    பார்முலா 1 கார் பந்தயம்: பிரேசில் பந்தயத்திலும் ஹேமில்டன் வெற்றி

    பார்முலா 1 கார் பந்தயம் போட்டியின் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார்.
    சாபாவ்லோ:

    கார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா-1’ கார்பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா-1’ கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

    இதன் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 3 மணி 01.01 நிமிட நேரத்தில் கடந்தார்.

    இந்த சீசனில் ஹேமில்டன் பெற்ற 9-வது வெற்றியாகும். மொனாகோ, கனடா, ஆஸ்திரியா, இங்கிலாந்து, அங்கேரி, ஜெர்மனி, அமெரிக்கா, மெக்சிகோ போட்டிகளில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.

    நடப்பு சாம்பியனான அவர் ஒட்டு மொத்தமாக பெற்ற 52-வது வெற்றியாகும். சுமேக்கர் 91 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஹேமில்டன் உள்ளார். மேக்ஸ்வெர்ஸ் டப்பன் (பெல்ஜியம்) 3-வது இடத்தை பிடித்தார்.

    20 சுற்றுகள் முடிவில் ரோஸ்பெர்க் 367 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். 2 முறை சாம்பியனான (2014, 2015) ஹேமில்டன் அவருக்கு அடுத்தப்படியாக 12 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளார். ஹேமில்டன் 355 புள்ளியுடன் இருக்கிறார்.

    இன்னும் ஒரு சுற்றே எஞ்சியுள்ளன. இதனால் ‘பார்முலா-1’ சாம்பியன் பட்டத்தை வெல்ல ரோஸ் பெர்க், ஹேமில்டன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 246 புள்ளிகளுடன் டேனியல் ரிக்கார்டோ (ஆஸ்திரேலியா) 3-வது இடத்தில் உள்ளார்.

    21-வது மற்றும் கடைசி சுற்று அபுதாபி கிராண்ட் பிரீ பந்தயம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதில் ரோஸ்பெர்க் வென்றால் அவரும், ஹேமில்டன் வென்றால் அவரும் சாம்பியன் பட்டம் பெறுவார்கள்.
    Next Story
    ×