search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போட்டியை ‘டிரா’ செய்வது எப்படி என்றும் எங்களுக்குத் தெரியும்: கோலி
    X

    போட்டியை ‘டிரா’ செய்வது எப்படி என்றும் எங்களுக்குத் தெரியும்: கோலி

    போட்டியை ‘டிரா’ செய்து எப்படி என்றும் எங்களுக்குத் தெரியும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்திய அணி கேப்டன் நிலைத்து நின்று விளையாடி 49 ரன்கள் எடுத்து அணியின் டிராவிற்கு உதவினார்.

    விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவி ஏற்றபோது, நான் எந்தவொரு சூழ்நிலையிலும் டிராவிற்காக விளையாடமாட்டேன். வெற்றியை குறிவைத்துதான் செல்வோம். முடியாத பட்சத்தில்தான் டிராவை பற்றி சிந்திப்போம் என்றார்.

    அதேபோல்தான் இலங்கை தொடரில் இருந்து இந்தியாவிற்கு முடிவுகள் வந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. பெங்களூரில் நான்கு நாட்கள் மழை பெய்ததால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது. இந்த இரண்டு போட்டிகளி்லும் மழை குறுக்கீட்டது.

    இதனால் இந்தியா ஆட்டம் எந்தவொரு சூழ்நிலையிலும் ‘டிரா’வை நோக்கி நகர்ந்தது கிடையாது. முதன்முறையாக இந்தியா டிராவிற்காக விளையாடியுள்ளது.

    இதனால் எங்களுக்கு போட்டியை ‘டிரா’ செய்வது எப்படி என்பதும் தெரியும் என்று விராட் கோலி கூறியுள்ளார். இன்றைய போட்டிக்குப்பின் ‘டிரா’ குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த போட்டியின் மூலம் ஆட்டத்தை ‘டிரா’ செய்வது எப்படி என்பதும் எங்களுக்கு தெரிந்துள்ளது சிறந்த விஷயம்.

    நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம் அல்லது தோல்வியடைந்து உள்ளோம். ஆகவே, இந்திய அணி எப்படி ஒரு போட்டியை ‘டிரா’ செய்து கொள்ளும் என்பது பற்றி ரசிகர்களுக்கு பெரிய சந்தேகம் இருந்திருக்கும்.

    ரவீந்திர ஜடேஜா களம் இறங்கும்போது அவரிடம் சென்று, இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னொரு விஷயத்தை பற்றி தெரிந்து கொண்டு அதில் முன்னேற்றம் காண நாமிருவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினேன்.

    ஒருவேளை வருங்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படலாம். அப்போது நமது நோக்கம் என்ன, எவ்வாறு செயல்பட வேண்டும், இருவரும் எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதை தானாகவே செயல்படுத்த வேண்டும்.

    ஒன்றிரண்டு ரன்கள் எங்கே அடிக்கலாம், பவுண்டரிகள் எங்கே அடிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு சராசரியாக கிரிக்கெட்டை ஆட வேண்டும். அதே சமயத்தில் பாதுகாப்பான ஆட்டத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய ஆட்டம் சவாலான சூழ்நிலை. ஆனாலும் நாம் திறமையாக அதை சமாளித்தோம்’’ என்றார்.
    Next Story
    ×