என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்த் டெஸ்டில் தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியா
    X

    பெர்த் டெஸ்டில் தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்டில் 539 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி முதல் இன்னிங்சில் 242 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தென்ஆப்பிரிக்காவின் வேகத்தில் வீழந்தனர். அந்த அணியால் முதல் இன்னிங்சில் 244 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    இதனால் முதல் இன்னிங்சில் 2 ரன்களே பின்தங்கிய நிலையில் இருந்த தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் டுமினி 141 ரன்னும், எல்கர் 127 ரன்னும் குவிக்க 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்திருந்தது. டி காக் 16 ரன்னுடனும், பிலாண்டர் 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டி காக் மற்றும் பிலாண்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் டி காக் 64 ரன்னிலும், பிலாண்டர் 73 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் வந்த மகாராஜ் 41 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 540 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 2 ரன்கள் பின்தங்கியிருந்ததால் 2-வது இன்னிங்ஸ் முடிவில் 538 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 539 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா 539 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஷேன் மார்ஷ், வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 52 ரன்னாக இருக்கும்போது வார்னர் ஆட்டம் இழந்தார். மார்ஷ் 15 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

    அடுத்து கவாஜா உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 34 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் ரபாடா பந்தில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வோக்ஸ் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    5-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் மறுமுனையில் கவாஜா அரைசதம் அடித்தார். அத்துடன் மார்ஷ் உடன் இணைந்து 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

    ஆஸ்திரேலியா அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. கவாஜா 58 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 370 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 6 விக்கெட்டுக்கள் உள்ளன.

    கடைசி நாளில் 370 ரன்கள் அடிப்பது மிகக்கடினம். இல்லாவிடில் 6 விக்கெட்டுக்களை வைத்து 90 ஓவர்களை கழிக்க வேண்டும். இதுவும் மிகக்கடினம் என்பதால் பெர்த் டெஸ்டில் தோல்வியை சந்திக்கும் நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது.
    Next Story
    ×