search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்
    X

    மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

    மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய பொது நுழைவுத்தேர்வு மூலம்தான் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர்களை சேர்க்க வகை செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த அவசர சட்டத்தை தடை செய்யக்கோரி மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த்ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

    இதேபோல் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் 3 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அதில், பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தங்களது கருத்தை கேட்க வேண்டும் என்றும், தங்களது கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

    Next Story
    ×