search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நொய்யல் - முசிறி கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
    X

    நொய்யல் - முசிறி கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

    புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.
    கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுப் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. புன்னம் சத்திரம் புன்னைவன நாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு புரட்டாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதையட்டி கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், திருமஞ்சனம், உள்ளிட்ட 18 திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. 

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடனாக தேங்காய், நீர்பூசணிக்காய்களில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தது. சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர். 

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நத்தமேடு சிவன்கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. இதில் சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நன்செய்புகழூர் மேக பாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக விழா நடைபெற்றது. கால பைரவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    முசிறி சந்திர மௌலீஸ்வரர் கோவிலில் அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பைரவர் சன்னதியில் உள்ள பைரவருக்கு பால், தயிர், தேன், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மிளகு சாதம், தயிர் சாதம் படைய லிடப்பட்டு வெண்பூசணி மற்றும் தேங்காய் மூடிகளில் வேப்பஎண்ணெய் மூலம் விளக்குகள் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

    பூஜைகளை கோவில் குருக்கள் மாணிக்க சுந்தர சிவாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தினார். பூஜைகளில் முசிறி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில், திருத்தலையூர் சப்தரிஷிஸ்வரர் கோவில், த.புத்தூர் காசிவிஸ்வநாதர் கோவில், ஆமூர் ரவீஸ்வர சுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகளில் பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை களுக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×