search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோலியாக் கடற்கரைக் கோவில்
    X

    கோலியாக் கடற்கரைக் கோவில்

    அகமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே உள்ளது ‘கோலியாக்’ என்ற கடற்கரை கிராமம். இந்த கோவில் பற்றிய வரலாற்றை கீழே விரிவாக பார்க்கலாம்.
    அகமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே உள்ளது ‘கோலியாக்’ என்ற கடற்கரை கிராமம். இங்குள்ள கடற்கரைதான் பலரையும் வியப்பையும், அதன் வாயிலாக மெய்சிலிர்க்க வைக்கும் பக்தியையும் வழங்கி வருகிறது. இந்த கடற்கரையில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் ஒரு சிவாலயம் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் இந்த ஆலயம் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் சுமார் 6 மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி சிவாலயம் வெளிப்படுவதுதான் விசேஷம். அதிலும் இந்த அதிசய சம்பவம் தினமும் அதே நேரத்தில் அதே அளவு கால இடைவெளியில் நடைபெறுவது மேலும் வியப்பை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.

    காலை 8 மணி அளவில் இந்தப் பகுதியில் கடல் உள்வாங்குவதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இறைவனை வழிபடுவதற்காக கடற் கரையில் காத்திருக்கும் பக்தர்கள், நடந்தே கடலுக்குள் செல்கின்றனர். உள்ளே மேடை போன்ற மணல் திட்டில் அந்த சிவாலயம் அமைந்திருக்கிறது. மேட்டின் மீது ஆங்காங்கே தனித்தனியாக 5 சிவலிங்கங்கள் உள்ளன. பெரிய கல் கொடி மரம் ஒன்றும் இருக்கிறது. இது தவிர சூலம் கொண்ட நான்கு தூண்களும் அமைந்துள்ளன. நந்தியும் உண்டு.

    பெளர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கக் கூடியது. ஆகஸ்ட் -செப்டம்பர் மாதம் பல மணி நேரம் கடல் உள்வாங்கிய நிலையில் இருக்கும். கடல் உள்வாங்க நாமும் அப்படியே நடந்து போகலாம்.

    இந்த சிவாலயத்தில் உள்ள இறைவனை அந்தப் பகுதி மக்கள் ‘நிஷ்களங்க மகாதேவர்’ என்று போற்றி வழிபடுகின்றனர். இந்த ஆலயம் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது. கடலுக்குள் சிவலிங்கங்கள் அமைந்திருக்கும் மேட்டின் ஒரு சுனையும் இருக்கிறது. இது மேலும் வியப்பை தருகிறது. மகாபாரதப் போரில் தங்களுடைய கவுரவர்களை எதிர்த்து போரிட்டனர்.

    அவர்கள் அனைவரும் ஒருவகையில் உறவினர்களே, போரில் உறவினர்களையே கொன்றதால், அவர்களுக்கு களங்கம் உண்டானது. அந்த களங்கத்தைப் போக்கிக் கொள்வதற்காக, பாண்டவர்கள் ஐந்து பேரும் சிவபெருமானை வழிபட எண்ணினர். அதன்படி கடலுக்குள் 5 சிவலிங்கங்களை தனித்தனியாக அமைத்து வழிபாடு செய்தனர். அவர்களின் வழிபாட்டில் மனமிரங்கிய சிவபெருமான், அவர்களின் களங்கத்தைப் போக்கினார். இதனால் இந்த இறைவன் ‘நிஷ்களங்க மகாதேவர்’ என்று அழைக்கப்படுவதாக காரண காரியம் கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்தை கண்டு வணங்குவது எளிதான காரியம் அல்ல. கடல்நீர் வற்றியதும், கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழி, பள்ளமும், சேறும் நிறைந்த பாதை. ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். ஆடையெல்லாம் நனைந்து, தடுமாறி விழுந்து, அடிபட்டு ஒருவழியாக சமாளித்து தான் ஆலயத்தை அடைய முடியும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காத பக்தர்கள், இங்கு நூற்றுக்கணக்கில் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    சென்னை - அகமதாபாத் நவஜிவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அகமதாபாத் சென்று, அங்கிருந்து பாவ்நகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க வேண்டும். பாவ் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோலியாக் கடற்கரைக் கோவில்.

    குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக் என்ற இடத்தில்தான் இந்த கடல் கோயில் இருக்கிறது..பாவ்நகர்....எளிதில் சென்றடையும் வகையில் ரயில் மற்றும் விமான போக்குவரத்து உண்டு. பாவ்நகரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கோலியாக். இந்த சிறு கிராமத்தை தாலாட்டுகிறது அரபிக் கடல்..
    Next Story
    ×