search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவம் போக்கும் பரணி தீப வழிபாடு
    X

    பாவம் போக்கும் பரணி தீப வழிபாடு

    தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, பரணி நட்சத்திரமன்று மாலையில், இல்லம் எங்கும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
    மனதால் கூட பாவம் செய்யக் கூடாது, பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய, ஆலயங்களை நோக்கியும் அடியெடுத்து வைக்கின்றனர்.

    தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று மாலையில், இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    அன்றைய தினம் வீட்டில் உள்ள அனைத்து வாசல்படிகளிலும் படிக்கு மூன்று வீதம் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணையிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுதுதான் அஷ்ட லட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள், ஐஸ்வரியம் பெருகும்.

    Next Story
    ×