சுவையான சிக்கன் ஈரல் வறுவல் செய்யலாம் வாங்க..!

சுவையான சிக்கன் ஈரல் வறுவல் செய்யலாம் வாங்க..!

Published on
கோழி ஈரல் - அரைக் கிலோ, சின்ன வெங்காயம் - 50 கிராம், பூண்டு - 8 பல், பட்டை - 2, இஞ்சி - 1 துண்டு, தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, கிராம்பு - 4, சோம்பு - 1 தேக்கரண்டி, எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள்- 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு- தேவையான அளவு
இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொண்டு, தேங்காய்த் துருவலுடன் கிராம்பு, சோம்பு, பட்டை ஆகியவற்றைச் சேர்த்து நீர் தெளித்து அரைத்துக் கொள்ளுங்கள்.
ஈரலைச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கழுவிப் பிழிந்து கொள்ளுங்கள்.
அந்த துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு இஞ்சி- பூண்டு விழுது, மஞ்சள் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துப் பக்குவமாகப் புரட்டிவிட்டு ஊற வையுங்கள்.
வெங்காயத்தைத் தோலுரித்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், வெங்காயத்தைத் தட்டிப் போட்டு வதக்குங்கள்
பிறகு ஈரல் துண்டுகளை மசாலாவுடன் கொட்டி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்க் கலவையைப் போட்டு உப்பு சேர்க்கவும். அரை கப் நீர் ஊற்றி, ஒரு தட்டால் மூடி வைத்து வேகவிடுங்கள்.
ஈரல் துண்டுகளை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. ஆகையால் அவை வெந்ததும் உடனே அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.
இப்போது சுவையான ஈரல் வறுவல் ரெடி!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com