தலை முடி வளர தேவையான வைட்டமின்கள்!

தலை முடி வளர தேவையான வைட்டமின்கள்!

Published on
தலை முடி வேர்களை வலுப்படுத்துவதிலும், புதிய முடியை வளரச் செய்வதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியில் அமர்வது மற்றும் இதுதவிர மீன், முட்டை, பால், தயிர் போன்ற உணவுப்பொருட்களில் வைட்டமி டி அதிகம் காணப்படுகிறது.
வைட்டமி ஈ ஒரு ஆக்சிஜனேற்றியாகும். இது முடியை ஃபிரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. பாதாம், வெண்ணெய் மற்றும் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது.
வைட்டமி சி தலைமுடியை வலுப்படுத்த தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமிம் சி உள்ளது.
பயோட்டின் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது முடியை வலுப்படுத்தி முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. முட்டை, கொட்டை வகைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள் பயோட்டின் நிறைந்த உணவுகள் ஆகும்.
முடி வளர்ச்சிக்கு அவசியமான ஆக்சிஜனை உடல் பாகங்களுக்கு கொண்டு செல்ல இரும்புச்சத்து உதவுகிறது. பசலைக் கீரை, பீட்ருட் மற்றும் சிவப்பு இறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com