கடந்த 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும் இடையே மிக அழகான கெமிஸ்டிரி இப்படத்தில் இருக்கும். இதனால் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டனர்.
இந்தாண்டு ஏப்ரல் மாதம் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் கோடையில் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.