பயனுள்ள சமையல் குறிப்புகள் உங்களுக்காக...

பயனுள்ள சமையல் குறிப்புகள் உங்களுக்காக...

Published on
சர்க்கரை பொங்கல் செய்யும் போது கடைசியாக கொஞ்சம் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றினால் சுவை அருமையாக இருக்கும்.
கூட்டு, பொரித்த குழம்பு வைக்கும் போது கடைசியாக சிறிதளவு மாங்காயைத் துருவி போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் பன்னீரை போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கசப்பாகவோ அல்லது புளிப்பாகவோ மாறாமல் இருக்கும்.
எப்போதும் கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்த பின்பு அதிக நேரம் வதக்க கூடாது. பச்சையாக இருந்தால் தான் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
வெண்டைக்காய் காரக்குழம்பு, சாம்பார் வைக்கும் பொழுது அது உடையாமல் இருக்க 2 சொட்டு எலுமிச்சை சாற்றை சேர்த்து வதக்கலாம்.
ஏலக்காய் தூள் அரைக்கும் பொழுது ஏலக்காய் நமுத்து போய்விட்டால் வெறும் வாணலியில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் அரைத்தால் மிருதுவாக அரைபடும்.
சர்க்கரை, வெல்லம், ஸ்வீட் வகைகள் போன்றவை வீட்டில் இருந்தால் அதில் இரண்டு துண்டு கிராம்பை போட்டு வையுங்கள். எறும்பு வரவே வராது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com