காலிபிளவர், முட்டைக்கோஸ் இவற்றை வேகவைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியைச் சேர்த்து வேகவிட்டால் அவற்றின் வாசம் மறைந்து, சுவையாக இருக்கும்.
துவரம் பருப்பை வேகவைக்கும்போது தேங்காய்த்துண்டு ஒன்றை நறுக்கிப் போடவும். பருப்பு விரைவில் வெந்து, வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.
கோடையில் எத்தனை முறை நீர் குடித்தாலும் நா வறட்சி அடங்காது. இதற்கு, கொத்தமல்லி விதை, கசகசா இரண்டையும் சிவக்க வறுத்து கசாயம் வைத்து தேவைக்கேற்ப பனைவெல்லமும் ஏலக்காய்ப் பொடியும் சேர்த்து குடிக்கலாம். இதனால் தாகம் தணிவதோடு, பித்தமும் நீங்கும்.
மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.
வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.