இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...!

இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...!

Published on
பக்கோடா, வடை முதலியவை செய்யும் பொழுது சிறிது சோம்பு அதிகமாக சேர்த்தால் ருசி தூக்கலாக இருக்கும்.
வெங்காயம் வதக்கும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் நன்கு வதங்கும். சர்க்கரை வெங்காயத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மென்மைப்படுத்தும்.
எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
பால்கோவா செய்யும்போது இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை துணியில் கட்டி பாலில் வைத்தால் பால்கோவாவின் நிறம் கிரீம் போல் கிடைக்கும்.
இரண்டு ஐஸ் கட்டிகள் மற்றும் கல் உப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பிளேடு கூர்மையாக மாறும்.
பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.
இட்லிக்கு மாவு அரைக்கும்போது சிறிது பழைய சாதம் மற்றும் அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com