இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Published on
சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
கோதுமை அல்வா செய்யும் போது, வெந்நீர் தெளித்து, நெய் கலந்து கிளறினால், அல்வா சுவையும், மணமும் கூடும்.
அதிரச மாவை கலந்த பின், வரும் கட்டியைத் தட்டை முறுக்கு, தேன்குழல் மாவில் கலந்தால் கர கர, மொறு மொறுவென்று இருக்கும்.
பால் காய்ச்சும்போது சில ஏலக்காய்களைப் போட்டால், பால் நீண்ட நேரம் புளிக்காலும், மணமாகவும் இருக்கும்.
சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com