ஆல்கஹாலில் மறைந்துள்ள ஆபத்துகள்!

ஆல்கஹாலில் மறைந்துள்ள ஆபத்துகள்!

Published on
ஆல்கஹால் என்ற சொல் 'அல்குஹ்ல்' என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது. தற்போது மது வகைகள் அனைத்தும் ஆல்கஹால் எனப்படுகிறது.
ஆல்கஹால் விரைவாக உறிஞ்சப்படுவதினால் இது அதிக கொழுப்பில் கரையக் கூடியதாகவும் மற்றும் உடலின் தசைகளில் விரைவாக பரவக்கூடியதாகவும் உள்ளது.
வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது. 60 மி.லி. ஆல்கஹாலை வெறும் வயிற்றில் குடிக்கும் போது ஒன்று முதல் 1½ மணி நேரத்திற்குள் ரத்தத்தில் கலந்து விடும்.
ஆல்கஹாலின் முக்கிய பாதிப்பு மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கும் போது மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.
ஒரு வித தூக்க கலக்கம், மந்தமான பேச்சு, மன குழப்பம், நிலையற்ற நடை, இரட்டை பார்வையை ஏற்படுத்துகிறது.
உடல் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் உடல் மன ஒருங்கிணைப்பு இழப்பு ஏற்படுகிறது. மது குடித்ததும், வயிறு வழியாக ரத்த ஓட்டத்தில் சேரும்.
ஒரு நபர் குடிக்கும் மதுவில் 20 சதவிகிதம் வயிற்றின் வழியாக ரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படுகிறது. மேலும் 80 சதவிகிதம் ஆல்கஹால் சிறுகுடலால் உறிஞ்சப்படுகிறது.
ஆல்கஹால் ரத்த ஓட்டத்தை அடைந்தவுடன், அது கல்லீரலுக்குச் சென்று வளர்சிதை மாற்றமடைகிறது. ஆல்கஹால் மூலக்கூறுகளை உடைக்கும் நொதிகளைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது.
மெட்டபாலிசம் ஆகாத ஆல்கஹால் உடலில் மீதம் இருக்கும். எஞ்சிய அனைத்தும் வியர்வை, சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது.
ஆல்கஹால் உடலில் பசியின்மை, கல்லீரல் சிதைவு, இரைப்பை, அமில சுரப்பை அதிகரித்து அழற்சியை அதிகரிக்கிறது.
கடுமையான கணைய அழற்சியும் நாளடைவில் ஏற்பட்டு உடலின் பல்வேறு செயல்பாடுகளும் பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com