சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. தொடர்ந்து 2018 உருவான தமிழ்ப் படம் 2 ஓரளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், விரைவில் 'தமிழ்படம் 3' உருவாகவுள்ளதாக அப்படத்தின் கதாநாயகன் சிவா உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த சிவா, ''தமிழ்ப்படம் 3 குறித்து 'ஒய் நாட்' தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்ரீகாந்த்திடம் பேசியுள்ளோம்.
கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கு மேலாக பேசி, 2025ல் தமிழ்ப்படம் 3 எடுக்க முடிவுசெய்துள்ளோம். ஒரு கதை எழுதி படம் பண்ணுவது நார்மல். ஆனால், 100 படங்களை பார்த்து கதை எழுதுவது சவாலான விஷயம்'' என்று தெரிவித்தார்.